ஓட்டல் அறையில் உடலுறவின்போது இறந்த ஊழியர் – யார் பொறுப்பு?

A French company has been found liable for the death of an employee who had a cardiac arrest while having sex with a stranger on a business trip.

அலுவலக பயணத்தின்போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட சமயத்தில், மாரடைப்பு ஏற்பட்டு ஒரு அலுவலர் இறந்ததற்கு நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரான்சில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சேவியர் எக்ஸ் என்ற அலுவலர் டி எஸ் ஓ என்ற பரிஸ் சேர்ந்த ரயில்வே சேவைகள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். 2013 இல் மத்திய பிரான்ஸ் பத்திரிகை அலுவலக பயணம் சென்றிருந்தபோது ஒரு விடுதியில் அவர் மரணமடைந்தார்.

இது முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட சம்பவம் என்று அவருடைய நிறுவனம் கூறியது. ஆனால் பணியிட விபத்தாக கருதி அவருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தரவேண்டுமென்று அரசு சுகாதார காப்பீட்டு நிறுவனம் அளித்த முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில் அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி இறந்த ஊழியர் உடைய குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றமொன்று உத்தரவிட்டிருக்கிறது.

தனது இறந்து போன ஊழியர் அவருடன் உடலுறவு கொண்ட பின் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த பிரெஞ்சு நிறுவனம் வாதிட்டது. ஆனால் அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது சட்டம் என்று நீதிபதிகள் கூறினர்.

உடலுறவுச் செயல்பாடு இயல்பானது குளிப்பது அல்லது உணவு சாப்பிடுவதைப் போன்றது ஆகவே அலுவலக பயணத்தின்போது இறந்ததற்கு உடலுறவை காரணம் சொல்ல முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் கூறியது இந்த கருத்தை பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

Leave a Reply