பூமியின் நுரையீரல் பற்றி எரிகிறது | #Amazonia #prayforamazonia

தீயில் கருகும் அமேசான் காடுகள் 

பிரேசில் உள்ள அமேசான் மழைக்காடுகள், கடந்த பத்தாண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த இரண்டு வாரங்களாக தீக்கிரையாகி கொண்டிருக்கின்றன. ரோமரியோ, ஆகிரி, அமேசன்ஆஸ் போன்ற பல மாநிலங்கள் இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்புகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டரில் #Amazonia #prayforamazonia என்கிற # டாக்கள் வைரலாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. உலகளவில் பல முன்னணி பிரபலங்கள் ட்விட்டரில் அமேசான் காடுகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ட்விட்டரில் அமேசான் காடுகளைப் பற்றி பதிவிட்டு இருப்பதாவது.

20 சதவிகிதம் ஆப்ஷனை உருவாக்கும் அமேசான் மழைக்காடுகள் கடந்த மூன்று வாரங்களாக எரிந்து கொண்டிருக்கின்றன. நம் பூமியைப் பாதுகாப்பது நமது கடமை என்று #prayforamazonia பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மைக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்.

உண்மையை சொல்லப் போனால் எங்கள் வீடு எரிகிறது. பூமியின் நுரையீரலாக இயங்கி 20 சதவீதம் ஆக்சிஜனை அளித்துக் கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடுகள் தீக்கிரையாகி கொண்டிருக்கின்றன.

இது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். G7 அமைப்பின் உறுப்பினர்கலே, நாம் இந்த அவசர நிலை பற்றி இரண்டு நாட்களில் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் வானியல் ஆய்வாளரான எரிக் கோலன்தஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது.

ஈடுஇணையற்ற காடான அமேசான் காடுகள் தான் நாம் பூமியில் வாழ்வதைப் சாத்தியமாகி கொண்டிருக்கின்றன.அவை இப்போது வரலாறு காணாத வகையில் எரிந்து கொண்டிருக்கின்றன. கார்பன் டையாக்சைட் வெளியிடப்படும் அளவு அதிகமாகி உள்ளது. கடந்த மாதம் தான் பூமியின் வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதம் ஆகும். தாம் பருவநிலை அவசரத்தில் உள்ளோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ வின் பதிவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிகளை தன்வசம் கொண்ட பூமியின் நுரையீரல் ஆன பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 74 ஆயிரம் முறை காடுகளில் தீப்பற்றியுள்ளது சென்ற ஆண்டைவிட 84 சதவிகிதம் அதிகமான முறை தீ பிடித்து உள்ளது .

இப்படி அதிகமாக காடு அழிவதற்கு காரணம் அதிபர் ஜபீர் பால்சோனரோ அதுதான் என்று விஞ்ஞானிகளும் இயற்கை பாதுகாவலர்களும் கருதுகிறார்கள். இவர் தான் பதவியேற்ற பிறகு மரம் வெட்டவும், காடுகளை அழித்து சமன் செய்யவும் விவசாயிகளுக்கும், மரம் வெட்டப் அவர்களுக்கும் அனுமதி அளித்துள்ளார். இறைவனிடம் வேண்டுவதை விட நாம் செய்ய வேண்டிய சில காரியங்களை அவர் கூறுவது. .

அமேசான் காடுகளை பாதுகாக்க frontline amazon உதவி செய்யுங்கள் தனிநபர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் காட்டை மீட்டெடுப்போம் என்று தொடர்ந்து ஆதரவு கொடுக்கவேண்டும் .

இதைப்பற்றிய செய்திகளை செய்தி நிறுவனங்கள் உலகளவில் பரவச் செய்ய வேண்டும்.காட்டை அழிவிலிருந்து மீட்க மாமிச உணவுகளை தவிர்த்து வாழ பழகுங்கள் என்று கூறினார்.

பாலிவுட் நடிகையான ஆலியா பட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டே இருக்கிறது 3 மில்லியன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஒரு மில்லியன் பூர்வீகக் குடியினரின் வீடாக உள்ளது அமேசான் மழைக்காடுகள்.

நம் பூமியில் கார்பன் டை ஆக்சைடு அளவை சரியான அளவில் பராமரிக்க காடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நீ இன்றி நாங்கள் வாழ முடியாது என்று அவர் கூறுகிறார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியதாவது கடந்த இரண்டு வாரங்களாக எரிந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகளின் படங்களைப் பார்க்கையில் அவை இதயத்தை நொறுக்குவதாகவும் எச்சரிப்பதும் உள்ளன. இக்காடுகள் 20 சதவிகிதம் ஆக்சன் தேவையை பூர்த்தி செய்கின்றன. காடுகளில் தீ பரவுவது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கக் கூடியது.

இந்த பருவ நிலை மாற்றத்தை பூமியால் தாங்க முடியலம் ஆனால் நாம் தாங்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமேசான் காட்டு தீயால் ஏற்படும் புகை பிரேசிலில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ளது. நாசாவின் விண்வெளி எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.

பல்கிவரும் ட்விட்டர் எதிர்பால் அமேசான்யில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக கூறும் அரசு சார்பற்ற இயக்கங்களை கடுமையாக சாடியுள்ளார் பிரேசிலின் அதிபர் ஜபீர் பால்சோனரோ .

Leave a Reply