ஆகஸ்ட் 22 Chennai Day கொண்டாடப்படுவது ஏன்?

History of Madras Day

ஏன் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடுகிறோம் தெரியுமா?  சென்னை வாங்கப்பட்ட தினம் இது. சென்னையின் பார்வையிலிருந்து சொல்ல வேண்டுமானால் சென்னை விற்கப்பட்ட தினம். இதைத்தான் சென்னை தினம் என நாம் கொண்டாடுகிறோம்.

கோரமண்டல் கடல் பகுதியை காலண்டர் நினைத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் விஜயநகர ஆட்சியில் இருந்த இந்த நிலப்பரப்பில் தங்களுடைய வணிக செயல்பாடுகளை தொடங்க எண்ணியது அதே சமயத்தில் பழவேற்காடு முதல் சாந்தோம் வரையிலான நிலப்பரப்பு வெங்கடப்ப நாயக்கர் கட்டுப்பாட்டில் இருந்தது. 

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளராக ஆண்ட்ரூ கோகன் கிழக்கிந்திய நிறுவனத்திற்காக வெங்கடப்ப நாயக்கர் உடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு, வங்கக் கடலோரம் ஒரு பொட்டல்  நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறார்கள். அங்கு வணிகத் தளம் அமைக்க முடிவு செய்கிறார்கள்.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த உடன்படிக்கை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. வெங்கடப்ப நாயக்கர் இன் தம்பியான அய்யப்ப நாயக்கர் தான் இந்த நிலத்தை வாங்க உதவியிருக்கிறார்.

1639 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திடம் அந்த நிலப்பரப்பை கொடுத்த பின்னர் வெங்கடப்பா நாயக்கரும் ஐயப்ப நாயக்கரும் ஆங்கிலேயர், தங்கள் வியாபார அலுவலகங்களை அமைக்க ஆள் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அந்த நிலப்பரப்பில் வணிகத்திற்காக குடியிருப்பு காகவும் ஜார்ஜ் கோட்டையை 1640 இல் கட்டுகிறார்கள். இந்த புள்ளியிலிருந்து சென்னை உருமாற தொடங்குகிறது. 

மதராஸ்  நகரத்தின் தொடக்க வரலாறு இரத்தம் தொவைதது. 1646 ஆம் ஆண்டு கோல்கொண்டா படைகள் சென்னையை கைப்பற்றின பல படுகொலைகள் அப்போது நிகழ்ந்தன. 1687 ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசு விழுந்து முகலாயர்களின் கைகள் உயர்ந்தன. முகலாயர்களும் கிழக்கிந்திய கம்பெனியும் ஒப்பந்தம் செய்து கொண்டன கிழக்கிந்திய கம்பெனி வலுவாக காலூன்றியது.  அதே சமயம் இந்த நிலப்பரப்பின் மீது பலரின் கண்களில் இருந்தன 1746 ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகள் சென்னையை கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டை பிரெஞ்ச் படைகளிடம் இருந்து மீட்கப்பட்டது.

மீண்டும் 1758 ஆம் ஆண்டு பிரெஞ்சு படையால் சென்னை முற்றுகை இடப்பட்டது. 1758 டிசம்பர் மாதத்தில் சென்னைக்குள் பிரான்ஸ் படைகள் நுழைந்தன. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டன. சுமார் மூன்று மாத காலம் ஜார்ச்  ஜார்ஜ் கோட்டை பிரெண்ட்ஸ் படைகளின் முற்றுகையிலிருந்து.

இறுதியில் அவர்களின் தோற்று பின் வாங்கினர். இப்படியாக இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்த நிலப்பரப்பு பிரிட்டனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலில் இந்த நிலப்பரப்பு மதராச பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஏன்? மதராச பட்டினம் என அழைக்கப்பட்டது என்பது குறித்து பல புதிர்கள் உள்ளன, பிராண்சிஸ் டே நிலத்தை வாங்கிய இடத்தில் ஒரு மீனவர் கிராமம் இருந்ததாகவும் அங்கு வசித்த மதரேசன்  ஆங்கிலேயர்களை எதிர்த்த தாகவும். அவர் பிரான்சிஸ் டே வற்புறுத்தி தன் பெயரை வைக்க செய்ததாகவும் ஒரு கதை உள்ளது. அது போல சென்னப்பட்டணம் என பெயர் வந்ததற்கும் இரு வேறு காரணங்கள் சொல்கிறார்கள். சென்னகேசவர், சென்னமல்லீஸ்வரர் ஆகிய கோயில்கள் அங்கு இருந்ததாகவும். அதன் காரணமாகவே சென்னபட்டணம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

மற்றொரு காரணமாக கூறப்படும் ஆங்கிலேயர்களுக்கு இந்த நிலப்பரப்பை வழங்கிய வெங்கடப்ப நாயக்கர் இன் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயரை இந்த நகரத்திற்கு சூட்டப்பட்டது எப்படியாயினும் சென்னை தினம் என்பது ஆங்கிலேயர்கள் இங்கு கால் பதித்த நாள்.

இத்தனை ஆண்டு காலங்களில் சென்னை பலவிதங்களில் மாறியிருக்கிறது வானுயர் கட்டிடங்கள் எழுந்துள்ளன.கூவம்  நதி தன் ஜீவனை இழந்து இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டு காலங்களில் மாறாமல் இருப்பது சென்னை நகரின் பன்முகத் தன்மைதான் .

Leave a Reply