அந்த காலத்தில் சென்னை எப்படி இருந்தது ? | Madras Day

சென்னை என்றவுடன் சட்டண உங்கள் நினைவுக்கு என்ன வரும், கடல், பகட்டான கட்டடங்கள், பிறகும் கூவம் நதியின் நாற்றமும் மாசுபாடும் இது எல்லாம் தானே உங்கள் நினைவுக்கு வரும்.

இப்போது சென்னையின் ஒரு அடையாளம் ஆகிப்போன கூவம்  இப்போது இருப்பது போல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இல்லை..

ஏன் கூவம் மட்டுமல்ல மொத்த சென்னையும் அப்போது வேறு வடிவில் இருந்திருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகளின் உடலாய் சென்னை இருந்திருக்கிறது. காடு கடல் மலை என மகோன்னத நிலையில் சென்னை இருந்திருக்கிறது.

இப்போது சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் துணியில் பாரதிதாசன் பயணித்திருக்கிறார்.

அவர் சொல்கிறார் ஒரு நாள் மாலை 4 மணிக்கு சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணியில் ஏறி அடுத்த நாள் காலை 9 மணிக்கு மகாபலிபுரம் சேர்ந்தோம் வழிப்போக்கன் நேரம் இனிமையாகக் கழிந்தது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட 80 வயது முதியவர் இடம் பேசிப் பாருங்கள் அவர் கூவத்தில் குதித்து விளையாட கதை சொல்லுவார். ஏரிகளின் நகரம் சென்னை வந்த கதையையும் சொல்லுவார்.

ஆம், இப்போது இருப்பதுபோல சென்னை அப்போது இல்லை இனி எப்போதும் வந்து சென்னை மீண்டும் திரும்ப போவதுமில்லை. திட்டமிடப்படாத நகர்மையம் ஒரு நகரத்தில் இந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ. அவை தான் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

வாருங்கள் சென்னப் பட்டினத்தின் அட்டகாச புகைப்படங்களை பார்ப்போம்.

Leave a Reply