இனி சௌதி பெண்களுக்கு தன் மகனின் அனுமதி தேவை இல்லை !

ஒரு சௌதி பெண்ணின் நிம்மதிப் பெருமூச்சு

Saudi Arabia allows women to travel independently

ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று சமீபத்தில் சவுதி அரேபிய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தன் வாழ்க்கை எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விவரிக்கிறார் ஜெட்டாவில் வசிக்கும் உலவா சால்வோ. 

அனுமதி இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என்பது சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகளை ஏற்பட்டுள்ள மற்றொரு மாற்றம். அடுத்த முறை வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது என் சவுதி பாஸ்போர்ட்டில் பயணத்திற்கான அனுமதியை பெற வேண்டாம். 

ஒரு குடிமகளாக , ஒரு பெண்ணாக, என் பாஸ்போர்ட்டை காண்பித்தால் மட்டுமே போதுமானது. தான் இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்வதற்கு நானே பொறுப்பு. ஒரு ஆணின் அனுமதி தேவையில்லை. பயணத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்பது சவுதி பெண்களுக்கு ஒரு தடையாகவே இருந்து வந்தது. குறிப்பாக அல்லது கணவரை இழந்த பெண்களுக்கு இது கடினமாக இருந்தது .யாரும் இல்லாத பட்சத்தில் பெண்கள் தங்களின் மகனிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.

தன் மகனை இத்தனை ஆண்டுகள் வளர்த்தது தன் பயண வழியில் அவளிடம் இருந்து பெறுவதற்கு என்று நினைப்பதற்கு பெண்ணிற்கு அவமானமாக இருக்கும்.

அதுவும் தந்தை, கணவர், சகோதரர், மகன் என எந்த ஆண் உறவு களும் இல்லாத பெண்களுக்கு பயணிப்பது என்பது மிகவும் சிரமம். பாரம்பரிய மற்றும் ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த குடும்பத்தில் இருக்கும் விவாகரத்தான அல்லது கணவரை இழந்த பெண்கள் பயணிக்க அனுமதி கொடுக்கப் படாத .

சவுதி அரேபியாவில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. 1990களில் நான் வளர்ந்தேன், என்னை சுற்றி பல தடைகள் இருந்தன. கலாசார ரீதியாகவும், மதத்தின் பெயரிலும், பல தடைகள். பெண்கள் மீது ஆண்கள் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கியது.

2008 லிருந்து 8 ஆண்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் என் குடும்பத்தை பார்க்க நான் ஜெட்டாவிற்கு வரும்போது இங்கு நான் கணிசமான மாற்றங்களை பார்க்கிறேன்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்ப்பதை பொது இடங்களில் சந்திப்பதை சமூகம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குடும்ப அமைப்பில் நேர்மையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. நம்பிக்கை பொறுப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான், தந்தை கணவர் மற்றும் சகோதரர் உடனான உறவை அமைத்திருக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு கணவன் மற்றும் மனைவி என்று தனித்தனி பொறுப்பு இருக்கும் நபர்கள் சேர்ந்த உறவாக இருக்கும்.

கணவர் ஒரு பாதுகாவலராக இருக்க மாட்டார் இதனால் பெண்களுக்கு என்று ஒரு தனித்துவம் கிடைக்கும் எங்களை நாங்களே பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் கிடைக்கும்.

Leave a Reply