சேலையில் கவர்ச்சி காட்டிய கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போதைய நிலைமை என்ன தெரியுமா ?

நிகிதா துக்ரல் இந்தியத் திரைப்பட நடிகையும், வடிவழகியுமாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலின் மூலமாகப் பிரபலமானார்.

நடிகை நிகிதா தனது கலை பயணத்தை 2007 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பான தொடரின் மூலம் ஆரம்பித்தார். இவர் கடைசியாக கார்த்தி, அனுஷ்கா மற்றும் சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்திருப்பார்.

நடிகையின் நிகிதாவின் முதல் தமிழ் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு. சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

இந்நிலையில் திடீரென காணாமல் போனவரை தேடிப்பார்த்த போது, 2017 ஆம் ஆண்டு கரண்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் மலர ஆரம்பித்து விட்டதாக தகவல் கிடைத்தது.

Leave a Reply